திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், தனியார் பள்ளியில் படித்து வரும் அஜய் பிரசன்னன், தமிழரின் பாரம்பரிய கலைகளில் கற்றுக்கொள்வதில் ஆர்வமுடையவர். சிறு வயதிலையே தமிழரின் பாரம்பரிய கலைகளை பயின்று வந்துள்ளார்.
மேலும், விளையாட்டுகளிலும் சிறப்பான பங்களிப்பை அளித்துவந்துள்ளார். பன்முக திறமை கொண்ட இவர், ஃபிட்ஜெட் ஸ்பின்னர் விளையாட்டு மூலம் உலக சாதனையும் புரிந்துள்ளார்.
தற்போது, ஒரு நிமிடத்தில் 82 முறை தோப்புக்கரணம் போட்டு இந்தியன் புக் ரெக்காட்ஸில் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார். மேலும், தோப்புக்கரணத்தை ஒலிம்பிக் போட்டியில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் அவர் விடுத்துள்ளார். இவரின் செயலை கொடைக்கானல் நகராட்சியின் முன்னாள் நகர்மன்றத் தலைவர் குரியன் ஆபிரகாம் பாராட்டியுள்ளார்.
இதையும் படிங்க: தேர்தல் மை வரலாறும் உருவாக்கமும் - விரைவில் கண்ணுக்கு தெரியாத மை!