திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அன்னை தெரசா மகளிர் கல்லூரியில் கற்பித்தல், ஆராய்ச்சி குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பல்கலைகழக துணைவேந்தர் வைதேகி விஜயகுமார் தலைமை வகித்தார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகளுக்கு எவ்வாறு கற்பிக்க வேண்டும் என்று விவாதிக்கப்பட்டது.
மேலும், ஆராய்ச்சி படிப்பு குறித்த ஆய்வு பற்றியும் விளக்கம் அளிக்கப்பட்டது. அதேபோல் ஆராய்ச்சி குறித்த படிப்புகளுக்கு முறையாக புத்தக தயாரிப்பில் ஈடுபட வேண்டும் எனவும் எடுத்துரைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவிகள், தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநில கல்வி நிலையங்களிலிருந்தும் பல பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: விமான விபத்தில் உயிரிழந்த விமான பொறியாளர்