தமிழ்நாடு முழுவதும் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அனைத்து கல்லூரிகளுக்கும் இன்று (மார்ச் 23) முதல் விடுமுறை அளித்து ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதற்கு உயர்கல்வித் துறை உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவை மதிக்காமல் கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் செயல்பட்டது.
அரசு உத்தரவுகளை எப்பொழுதுமே மதிக்காமல் காற்றில் பறக்கவிடும் நிலையில்தான் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் செயல்பட்டுவருகிறது எனக் கூறப்படுகிறது.
இந்தச் சூழல் பற்றி பல்கலைக்கழக நிர்வாகத்திடம் விசாரித்தபோது தங்களுக்கு உரிய உத்தரவு உயர் கல்வித் துறையிடம் இருந்து வரவில்லை என்று தெரிவித்தனர்.
மாணவிகள் தொடர்ந்து பல்கலைகழகத்திற்கு சென்று வகுப்புகளை தொடர்ந்தனர். அரசு கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துள்ள காரணத்தினால் மாணவிகள் சிலர் கல்லூரிக்கு செல்லவில்லை. அரசு உத்தரவை மீறி கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் செயல்படுவதால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளதால், உயர்கல்வித் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவிகளும் பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: 'விசில்' அடிக்க அழைக்கும் மயில்சாமி!