கரோனா பரவல் இரண்டாம் அலையின் தாக்கத்தின் காரணமாக இன்று (ஏப்ரல் 20) முதல் சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டு சுற்றுலாப் பயணிகள் வருவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
தற்போது தமிழ்நாடு அரசு சார்பில் சுற்றுலாவிற்கு எந்த ஒரு தளர்வும் அறிவிக்கப்படாததால் சுற்றுலாவை நம்பி உள்ள மக்கள் வேதனை அடைந்துவருகின்றனர்.
கொடைக்கானலில் சுற்றுலாவை நம்பியே பெரும்பாலான மக்கள் இருந்துவருகின்றனர். இதனைத் தொடர்ந்து வனத் துறை கட்டுப்பாட்டில் உள்ள மோயர் பாயிண்ட், குணா குகை, பில்லர்ராக், பைன் மரக்காடுகள், பேரிஜம் ஏரி, தோட்டக்கலைத் துறைக்குச் சொந்தமான பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட தலங்கள் சுற்றுலாப் பயணிகளின்றி வெறிசோடி காணப்பட்டன.
எனவே தமிழ்நாடு அரசு சுற்றுலாவிற்கு தகுந்த கட்டுப்பாடுகள் விதித்து சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க வேண்டுமென உள்ளூர் பொதுமக்கள், சுற்றுலாவை நம்பி உள்ள மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.