திண்டுக்கல்: மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல் சுற்றுலா தளத்தில் மிகவும் பிரபலமானது. கொடைகானல் மத்திய பகுதியில், நட்சத்திர ஏரி (star lake). கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள், இந்த நட்சத்திர ஏரியில் படகு சாவரி செய்வது வழக்கம்.
சுற்றுலா பணிகள் அதிகம் விரும்பும் இந்த நட்சத்திர ஏரி சமீப காலமாக நீர்த்தாவரங்கள் நிறைந்து மாசடைந்துள்ளது. மேலும் சுற்றுலா வரும் பயணிகள் பிளாஷ்டிக் பொருட்கள் மற்றும் பாட்டில்களை வீசுவதாலும், அப்பகுதியில் இருக்கும் வீடுகளில் இருந்து கழிவு நீர் ஏரியில் கலப்பதாலும், ஏரியில் உள்ள நீர் மாசடைந்து உள்ளது.
மாசடைந்துள்ள ஏரியை தூய்மை படுத்த தமிழ்நாடு அரசு புதிய திட்டங்களை வகுத்து நீர்த்தாவரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் தற்போது ஏரியை தூய்மை செய்வதற்கு ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் கலை செடிகளை அகற்றும் ராட்சத இயந்திரம் மூலம் ஏரி தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த தூய்மை பணியை நகர் மன்ற தலைவர் செல்லதுரை தொடங்கி வைத்தார். தொடர்ந்து நட்சத்திர ஏரி முழுவதிலும் பணிகள் தூர்வரும் பணிகள் நடைபெறுவதால் தற்காலிகமாக சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னை ஏர்போர்ட் - 5 அடுக்கு பாதுகாப்பு அமல்