திண்டுக்கல்: கரோனா பாதிப்பு குறைந்துவரும் நிலையில், பல்வேறு தளர்வுகள் அறிவித்தும், இ-பதிவு முறைகளை நீக்கம் செய்தும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது.
கரோனா விதிமுறைகளை பின்பற்றியும், அரசின் விதிமுறைகளை கடைபிடித்தும் தோட்டக்கலைதுறைக்கு சொந்தமான பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்கா உள்ளிட்டவை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று 75 நாட்களுக்கு பிறகு பூங்காக்கள் திறக்கப்பட்டது.
பூங்கவிற்கு வந்த சுற்றுலாப் பயணிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து சுற்றுலாப் பயணிகளை பூங்கொத்து கொடுத்து தோட்டக்கலை துறை அலுவலர்கள் வரவேற்றனர்.