ETV Bharat / state

கொடைக்கானலில் மூன்று பூங்காக்கள் மூடல்! - etvbharat

கொடைக்கான‌லில் மூன்று பூங்காக்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. எனினும் இங்கு சுற்றுலாப் பயணிகள் வர எந்தத் தடையும் இல்லை.

கொடைக்கான‌ல் பூங்காக்க‌ள் த‌ற்காலிக‌மாக‌ மூட‌ப்ப‌டுவ‌தாக‌ வ‌ருவாய் கோட்டாசிய‌ர் த‌க‌வ‌ல் தெரிவித்தார்

author img

By

Published : Jul 7, 2021, 9:30 AM IST

திண்டுக்கல்: தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலையின் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது கரோனா பாதிப்பு குறைந்து வருவதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

தொடர்ந்து இ-பாஸ் முறை ரத்து செய்யப்பட்டதால் நேற்று முன்தினம் (ஜூலை 5) முதல் சுற்றுலாப் பயணிகள் வரத்தொடங்கினர். கொடைக்கானலில் தோட்டக்கலை துறைக்கு சொந்தமான பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்கா உள்ளிட்டவை திறக்கப்பட்டன.

பூங்காக்கள் மூடல்

இந்நிலையில், நேற்று (ஜூலை 6) சுற்றுலாப் பயணிகள் வருகையை தொடர்ந்து கரோனா விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, மூன்று பூங்காக்களை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளதாக கோட்டாட்சியர் முருகேசன் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், “அர‌சு அறிவித்த‌ கரோனா விதிமுறைக‌ளை சுற்றுலாப் ப‌ய‌ணிகள் பின்ப‌ற்றுவதில்லை. இத‌னால் பூங்காக்கள் தற்காலிகமாக மூட‌ப்ப‌டுகின்றன. எனினும், கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வர எந்தத் தடையும் இல்லை” என்றார்.

இதையும் படிங்க: 'வறுமையால் சைக்கிளில் விவசாயம் செய்யும் தந்தை, மகன்'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.