திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே குறிஞ்சி நகர் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலில், கடந்த வாரம் திருவிழா தொடங்கியது.
இந்நிலையில் கடந்த பத்து நாள்களாக தீச்சட்டி, பூக்குழி உள்ளிட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து நேற்று (மார்ச்9) டிப்போவில் இருக்கும் காளியம்மன் கோயிலில் இருந்து ஏரிசாலை, செவன்ரோடு, அண்ணாசாலை, முஞ்சிக்கல் பகுதி வழியே குறிஞ்சிநகர் மாரியம்மன் கோயிலுக்கு சென்றடைந்தனர். இந்த ஊர்வலத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மேலும் 569 பேருக்கு கரோனா!