திண்டுக்கல்: கொடைக்கானலில் தனியார் விடுதியில் இந்திய பல் மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு கிளையின் 35ஆவது மாநில மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் கலந்து கொண்டார்.
இதனையடுத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பல் மருத்துவம் பற்றியும் மற்றும் பல் மருத்துவம் குறித்தும் பேசப்பட்டது. பல் மருத்துவம் குறித்த புத்தகங்களும் அமைச்சர் மதிவேந்தன் வெளியிட்டார்.
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பல் மருத்துவத்தை முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை அடுத்து முதலமைச்சர் அவர்களின் கவனத்தில் எடுத்துச் செல்லப்பட்டு, அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்; மேலும் பல் மருத்துவமனைகள் அமைப்பதற்கு கடன் உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவர்கள், மருத்துவ மாணவ மாணவிகள் உட்பட 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டவர்களுக்கு நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: புற்றுநோய்ப்பாதிப்பு என்பது நமக்கு அச்சுறுத்தலாகவே உள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்