கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப் பயணிகளால் போக்குவரத்து பாதிப்பு - dindigul latest news
கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பால் பல கிலோ மீட்டர் தொலைவு வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் தேங்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல்: கொடைக்கானலில் வார விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை ஆகிய நாள்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படும். இந்நிலையில் வார விடுமுறையான இன்று சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமாக அதிகரித்துள்ளது.
கொடைக்கானலில் முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு செல்லக் கூடிய பிரதான சாலையான ஏரிச்சாலை, கலையரங்கம் பகுதி, அப்சர்வேட்டரி சாலை மற்றும் மூஞ்சிக்கல் பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பல கிலோ மீட்டர் தொலைவு வரை போக்குவரத்து பாதிப்பால் ஆயிரக்கணக்கான வாகனங்கள் தேங்கிய வண்ணம் உள்ளது.
மேலும், போக்குவரத்தை சீர் செய்வதற்கு போதிய காவலர்கள் இல்லாததால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் சுற்றுலாத் தலங்களைக் காண முடியாமல் சுற்றுலாப்பயணிகள் திரும்பிச் செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கைதான ஷாருக்கான் மகனுக்கு மருத்துவப் பரிசோதனை