ETV Bharat / state

'வெயிலில் காயும் நறுமணப் பொருள்களின் ராணி' - பதப்படுத்தும் தொழிற்சாலை எப்போது? - Cardamom cultivation in Kodaikanal

திண்டுக்கல்: ஏலக்காய் பதப்படுத்தும் குளிர்சாதன கிடங்கு அமைத்து தர விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொடைக்கானலில் ஏலக்காய் விவசாயம்
கொடைக்கானலில் ஏலக்காய் விவசாயம்
author img

By

Published : Sep 17, 2020, 7:22 PM IST

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கோம்பை காடு, வெள்ளக்கெவி, பண்ணைக்காடு உள்ளிட்ட மலை கிராமங்களில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் ஏலக்காய் விவசாயம் செய்யப்படுகிறது. பொதுவாக ஏலக்காய் பயிர் விளைச்சலுக்கு இரண்டு வருட விவசாயம் காலமாகும்.

தற்போது ஏலக்காய் விவசாயத்திற்கு ஏற்றவாறு கொடைக்கானல் மலை பகுதியில் நிலவும் தட்பவெட்பநிலை உள்ளதால் ஏலக்காய் விளைச்சல் அமோகமாக உள்ளது‌. இந்நிலையில், அறுவடைக்கு தயாரான நிலையில் ஏலக்காய்கள் விளைந்துள்ளன. ஆனால், கொடைக்கானலில் பதப்படுத்தும் கிடங்கு இல்லாததால் ஏலக்காய்கள் வெயிலில் காயும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

கொடைக்கானலில் ஏலக்காய் விவசாயம்

இதனால், ஏலக்காய் பச்சை அல்லது பழுப்பு நிறமாக மாறுவதால் கிலோ 6000 ரூபாய்க்கு விற்க வேண்டிய ஏலக்காய் வெறும் 2000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆதலால் கேரளா மாநிலத்தில் இருப்பது போல கொடைக்கானலிலும் ஏலக்காய் பதப்படுத்தும் கிடங்கு அமைத்து தர வேண்டும் என தோட்டக்கலை துறைக்கு மலைவாழ் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: வாசனை இழந்த ஏலத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.