திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலைச் சுற்றி வில்பட்டி, அட்டுவம்பட்டி, பள்ளங்கி, கோம்பை, பூம்பாறை, மற்றும் பெருமாள்மலை, பேத்துப்பாறை உள்ளிட்டப்பகுதிகளில் பீன்ஸ் முக்கிய விளைபயிராக உள்ளது. இந்த பீன்ஸ் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது .
விவசாயத்திற்கு ஏற்ப மழை பெய்துள்ளதால் பீன்ஸ் பயிர் நல்ல விளைச்சலை தந்துள்ளதாக விவசாயிகள் கூறியுள்ளனர். தற்போது முதற்கட்ட அறுவடை செய்யப்பட்டு வரும் நிலையில் ஒரு கிலோ 50 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
இதனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நல்ல விலை கிடைத்துள்ளதாக விவசாயிகள் கூறியுள்ளனர். கொடைக்கானல் மலைப்பகுதியில் இந்த ஆண்டு பீன்ஸ் நல்ல விளைச்சலையும் தந்துள்ளது. நல்ல விலையும் கிடைத்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க:இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம் தமிழ்நாட்டில் அமையவுள்ளது