திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மேல்மலை, கீழ்மலை என பல கிராமங்கள் அமைந்துள்ளன. இங்கு பெரும்பாலான மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர்.
தற்போது கொடைக்கானலில் சீதாப்பழம் விளைச்சல் அதிக அளவில் இருந்து வருகிறது. மேலும் கொடைக்கானல் பகுதிகளில் விளையும் சீதாப்பழம் மருத்துவ குணம்வாய்ந்தது.
இந்த சீதாப்பழத்திற்கு புற்றுநோயை குணப்படுத்தும் தன்மை உள்ளது என மலைக்கிராம விவசாயிகள் கூறுகின்றனர்.
மேலும், உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த சீதாப்பழம் கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பதாகவும், இந்த ஆண்டு முள் சீதாப்பழத்தால் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைத்ததாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
தற்போது சுற்றுலா பயணிகள் வருகை சற்று அதிகரித்துள்ளதால் ஆர்வமுடன் சீதாப்பழத்தை வாங்கி செல்வதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ராஜபாளையம் புதிய டாஸ்மாக் கடையை எதிர்த்து பொதுமக்கள் போராட்டம்!