திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அமைந்துள்ள மலைக் கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு விவசாயமே பிரதான தொழிலாக இருந்துவருகிறது.
குறிப்பாக கொடைக்கானலில் மலை கிராமங்களான தாண்டிக்குடி, பண்ணைக்காடு, கவுஞ்சி, மன்னவனூர், அட்டுவம்பட்டி, பள்ளங்கி, வில்பட்டி பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் மருத்துவ குணம் கொண்ட ப்ரோக்கோலி விவசாயம் செய்யப்பட்டுவருகிறது.
அந்த ப்ரோக்கோலி தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது. இயற்கை சூழலில் விளைவிக்கப்படும் ப்ரோக்கோலி 120 ரூபாய்க்கு விற்ற நிலையில், தற்போது கரோனா பெருந்தொற்று தாக்கத்தால் வெளி மாவட்டம், வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ப்ரோக்கோலி விலை குறைந்து இருப்பதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதனால் அதனை நம்பி பயிரிட்ட விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதையடுத்து, மலைவாழ் விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க...229 டன் அம்மோனியம் நைட்ரேட் 12 கண்டெய்னர்களில் புறப்பட்டன!