திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே முக்கிய பகுதியாக வட்டக்கானல் பகுதி அமைந்துள்ளது. சுற்றுலாப் பயணிகளை கவரும் விதத்தில் அமைந்த பகுதி என்பதால், விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவர்.
இந்நிலையில், பாண்டிசேரியில் இருந்து ஐந்து பேர் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்துள்ளனர். அப்போது வாகனம் வட்டக்கானல் பகுதி அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வனப்பகுதிக்குள் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் வாகனத்தில் சிக்கி கொண்டவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதில் பலத்த காயமடைந்த சுற்றுலாப் பயணிகள் ஐந்து பேர் கொடைக்கானல் அரசு மருத்துவமனையிலும், காலில் முறிவு ஏற்பட்ட அழகன் என்பவர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து கொடைக்கானல் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க...கீழாநெல்லிக் கோட்டையில் வெடிகுண்டு வீச்சு: வீசியவர்களைக் காவல் துறையில் ஒப்படைத்த மக்கள்