திண்டுக்கல்: கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் கடும் பனியிலிருந்து பிரையண்ட பூங்காவில் இருக்கும் மலர்செடிகளை பாதுகாக்க பூங்கா ஊழியர்கள் நிழல் வலைகளைக் கொண்டு மலர்செடிகளை மூடிவருகின்றனர்.
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடவு செய்யப்பட்ட மேரிகோல்ட், சால்வியா, அஸ்ட்ரோமரியா, டெல்பீனியம் உள்ளிட்ட பல்வேறு மலர் செடிகள் தற்போது வளர்ந்து வரத்தொடங்கியுள்ளன. இந்நிலையில், கடுமையான பனியினால், மலர் செடிகள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், பூங்கா நிர்வாகத்தினர் மாலை வேளையில் மலர்செடிகளை நிழல் வலை கொண்டு மூடும் பணியினைச் செய்துவருகின்றனர். மாலை நேரத்தில் மூடப்படும் செடிகள் மீண்டும் காலையில் பூங்கா திறக்கும் நேரத்தில் அப்புறப்படுத்தப்படுகிறது. இதன்மூலம், கடும் பனியில் மலர் செடிகளை பாதுகாக்க முடியும் என பூங்கா நிர்வாகத்தின் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: நோய், நொடிகள் நீக்கும் சேத்தாண்டி திருவிழா