திண்டுக்கல்: கேரள மாநிலம் எர்ணாகுளம் பல்லுரித்தி கிராமத்தை சேர்ந்தவர்கள் ரகுராம் (46) - உஷா (44) தம்பதி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் (நவ. 21) பழனிக்கு வந்த தம்பதி கோயிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு, அடிவாரம் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினர்.
நேற்று (நவ. 22) மாலை 5 மணி ஆகியும், அறை திறக்கப்படாததால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் அடிவாரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விடுதிக்கு வந்த போலீசார் அறைக்கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அங்கு ரகுராம், உஷா தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து இறந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அறையில் இருந்து கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர்.
அதில் சிறிய விஷயத்திற்காக பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த 10 பேர் கொண்ட நபர்கள் தங்களை நீதிமன்றம் வரை அழைத்துச் சென்றதாகவும், இதனால் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் எழுதியிருந்தனர். தங்களுடைய தற்கொலைக்கு அந்த 10 நபர்கள் தான் காரணம் என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கடிதத்தில் தம்பதி குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: மச்சினிச்சியை திருட்டுத்தனமாக மணந்த கணவர்.. மனைவி எடுத்த அதிரடி முடிவு!