திண்டுக்கல்லில் எம்ஜிஆரின் 150ஆவது பிறந்த நாள் தினத்தை முன்னிட்டு மணிக்கூண்டு அருகே பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த அதிமுக பேச்சாளர்கள் பலரும் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், "திமுக என்ற கட்சி இன்று இருப்பதற்கு காரணமே புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தான். திமுக ஆட்சியில் அமர காரணமானவர் எம்ஜிஆர் என்று அறிஞர் அண்ணாவே கூறியுள்ளார். அறிஞர் அண்ணாவின் மறைவிற்குப் பிறகு, நாவலர் நெடுஞ்செழியன் முதலமைச்சர் ஆவார் என்று எதிர்பார்த்த நிலையில், கருணாநிதி தனது குள்ளநரி மூளையைப் பயன்படுத்தி, எம்ஜிஆரின் உதவியோடு முதலமைச்சர் பதவி வகித்தார். இவையனைத்தும் வரலாறு.
நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் நியாயமில்லை என்று திமுக தலைவர் கூறுகிறார். உண்மையில் ஸ்டாலினுக்கு ஆண்மை இருந்தால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலைச் சந்திக்கத் தயாரா? உள்ளாட்சித் தேர்தல் தாமதமானதற்கு காரணமே திமுக தான். தற்போது, திமுக, அதிமுகவை சிறுபான்மையினருக்கு எதிரான கட்சியாக சித்தரிக்க முயற்சிக்கிறது.
ஊடகவியலாளர்களுடன் மாற்றுப் பாலினத்தவர்கள் கலந்துரையாடல்!
ஆனால், நாங்கள் எப்போதும் சிறுபான்மை மக்களோடு மக்களாக வாழ்பவர்கள். எங்களைப் பொறுத்தவரை அம்மன் கோயில் கூலும், அல்லாஹ் கோவில் நோன்பு கஞ்சியும் ஒன்று தான். எங்களுக்கு எந்த வேறுபாடும் கிடையாது" என்றார்.