திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வட்டம் செந்துறை அருகே புகையிலைப்பட்டியைச் சேர்ந்தவர் மணிகண்டன். விவசாயியான இவர், கால்நடைகளையும் வளர்த்து வருகிறார்.
இவர் தனது வீட்டில் வளர்த்து வரும் ஜெர்சி பசுமாடு ஒன்று இரண்டு கன்றுகளை அடுத்தடுத்து ஈன்றது. இதனால் மணிகண்டனும் அவரது குடும்பத்தாரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
தற்போது பசு மற்றும் கன்றுகள் நலமுடன் உள்ளன. பொதுவாக பசு பிரசவத்தின்போது ஒரு கன்று ஈனுவது வழக்கம். ஆனால் அரிதாக தங்கள் பகுதியில் இரண்டு கன்றுகளை ஈன்றுள்ள பசுவையும், குட்டிகளையும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள மக்கள் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர்.,
இதையும் படிங்க: திண்டுக்கல்லில் உதயமான புதிய மார்க்கெட் - விவசாயிகள் மகிழ்ச்சி