ETV Bharat / state

கொடைக்கானலில் 150 அடி ஆழத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்து - ஒருவர் பலி! - Dindigul important News

கொடைக்கானல் அருகே உள்ள தாண்டிக்குடி கிராமத்திலிருந்து அரசன் கொடை செல்லக்கூடிய பகுதியில் 150 அடி ஆழத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். எட்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

கொடைக்கானலில் 150 அடி ஆழத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்து-ஒருவர் பலி

author img

By

Published : Nov 20, 2022, 8:42 PM IST

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே தாண்டிக்குடி என்னும் மலைக்கிராமம் அமைந்துள்ளது. இந்தப் பகுதியைச்சேர்ந்த பன்னீர்செல்வம், செந்தில் குமார், அபிராமன், ஈஸ்வரன், சின்னையா, சரத்குமார், சேகர், நாகராஜன், கரியம்மாள் ஆகிய 9 பேர் தாண்டிக்குடி பகுதியில் இருந்து ஜீப் மூலமாக அரசன் கொடை பகுதிக்குச் சென்றுள்ளனர்.

பின்னர் விவசாயப்பொருட்களை இறக்கி வைத்துவிட்டுத் திரும்புகையில், சுமார் 150 அடி பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திலேயே அபிராமன் என்பவர் உயிரிழந்தார். தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் அவர்களை மீட்டு தாண்டிக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

கொடைக்கானலில் 150 அடி ஆழத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்து - ஒருவர் பலி!

அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் மூன்று பேர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்தப் பகுதிக்கு செல்லக்கூடிய சாலை கரடு முரடான சாலையாக இருந்து வருவதால் அடிக்கடி விபத்தும் ஏற்பட்டு வருகிறது. தொடர்ந்து இந்தப் பகுதிக்குச் செல்லக்கூடிய சாலையை விரைந்து சீரமைத்துத் தர வேண்டும் என அப்பகுதி மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: கருத்தடை சிகிச்சை செய்துக்கொண்ட பெண் மரணம் - நீலகிரியில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.