ETV Bharat / state

சீறிப்பாய்ந்த காளைகள்! - திண்டுக்கல்லில் களைகட்டிய ஜல்லிக்கட்டு - குட்டதுஆவாரம்பட்டி

திண்டுக்கல்: புனித அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு குட்டத்துஆவரம்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 550 காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

சீறி பாய்ந்த காளைகள்!
சீறி பாய்ந்த காளைகள்!
author img

By

Published : Feb 22, 2020, 5:01 PM IST

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா குட்டத்துஆவரம்பட்டியில் புனித அந்தோணியார் ஆலய திருவிழா நேற்று தொடங்கியது‌. இந்த விழாவின் தொடர்ச்சியாக இரண்டாம் நாளான இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

இதில் மதுரை, தேனி, அலங்காநல்லூர், திருச்சி, புதுக்கோட்டை, பாலமேடு, மேலூர், மணப்பாறை, பழனி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வந்திருந்த 550 காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டனர்.

இப்போட்டியில் சிறப்பாக காளைகளை அடக்கிய வீரர்களுக்கு தங்க காசுகள், வெள்ளி காசுகள், ஆட்டுகுட்டி, பீரோ, கட்டில், சோபா, சைக்கிள் உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டன. அதேபோல் வீரர்களின் பிடியில் சிக்காமல் சிறப்பாக ஆடிய காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

திண்டுக்கல், குட்டதுஆவாரம்பட்டியில் நடைப்பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டி

ஜல்லிக்கட்டுப் போட்டியை முன்னிட்டு பாதுகாப்புப் பணியில் 200-க்கும் மேற்பட்ட காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டிருந்தனர். புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியைக் காண சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

இதையும் பார்க்க: அய்யம்பட்டி ஜல்லிக்கட்டு - துள்ளிய காளைகளுடன் மல்லுக்கட்டிய வீரர்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.