திண்டுக்கல் மாவட்டம் ஆர்விஎஸ் பொறியியல் கல்லூரியில் ஜவுளி பொறியியல் துறை சார்பாக உலக அளவிலான ஜவுளி ஆராய்ச்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்த டிம் ஜோசப் மெண்டோசா கலந்துகொண்டு மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், “ஒரு சாதாரண எளிய குடும்பத்தில் பிறந்த நான், படித்த பின்னர் அமெரிக்கா மற்றும் கனடா நாட்டிற்கு சென்று உலகின் தலைசிறந்த ஆடை வடிவமைப்பு நிறுவனங்களில் பணிபுரிந்தேன். கடந்த 30 ஆண்டுகளில் நான் சந்தித்த எனது அனுபவங்களை நம் நாட்டு மாணவர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்பினேன். ஏனெனில் மாணவர்கள் என்னால் சாதிக்க முடியாத உயரங்களை எட்ட வேண்டும் என்பதே எனது ஆசை.
நம் நாடு ஜவுளித் துறையில் உலகின் மிகப்பெரிய சந்தையாக உள்ளது. கோடிக்கணக்கான மக்கள் அன்றாடம் தங்களுக்கு தேவையான ஆடைகளை வாங்கிக்கொண்டே உள்ளனர். ஆனால் இன்றளவும் நம் நாட்டில் டிசைனிங்கில் பின்தங்கி உள்ளோம். பொதுவாக மேலை நாடுகளை சார்ந்தே நமது ஆடை வடிவமைப்பும் அதன் உருமாற்றமும் இருந்துவருகிறது. இதனை மாற்ற மாணவர்கள் பயன்பெறும் வகையிலான ஆடை வடிவமைப்பு மற்றும் ஃபேஷன் தொடர்பான புதிய தொழில்நுட்பங்களை கற்கும் வகையில் ஆராய்ச்சியகங்களை அமைத்திட வேண்டும். அப்பொழுது ஆடை வடிவமைப்பில் புதிய மாற்றங்களை மாணவர்கள் முன்னெடுப்பர். இதனால் ஆடை வடிவமைப்பு துறையில் அபரிமிதமான வளர்ச்சி பெறுவோம். இது ஒரு ஆரோக்கியமான தொழில் உற்பத்தியை உருவாக்கும்.
இதையும் படிங்க...யார் தவறு செய்தாலும் சட்ட நடவடிக்கை பாயும் - அமைச்சர் செல்லூர் ராஜூ