பழனி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட கூடுதல் நீதிபதி சாந்திசெழியன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மகளிர் தின விழா கேக்கை வெட்டி தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் பெண்களுக்கான பேச்சுப்போட்டி, கவிதை போட்டி, கயிறு இழுக்கும் போட்டி, பலூன் உடைக்கும் போட்டி, கண்களைக் கட்டிக்கொண்டு உரி அடிக்கும் போட்டி உள்ளிட்ட ஏராளமான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. நிகழ்ச்சியில் பெண் அரசு ஊழியர்கள், பெண் நீதிபதிகள், பெண் வழக்கறிஞர்கள், பெண் மருத்துவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.
குற்றவியல் நீதிபதி ரகுபதிராஜா பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகள் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினார். மகளிர் தின விழா நிகழ்ச்சியில் ஆர்வமுடன் கலந்துகொண்ட 300-க்கும் மேற்பட்டோருக்கு சார்பு நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜ் விருந்து வைத்து மகளிர் தின விழா வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.
இதையும் படிங்க: கொரோனா வைரஸ் - வீண் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம்!