திண்டுக்கல் அடுத்துள்ள பிள்ளையார்நத்ததைச் சேர்ந்தவர், விஜயகுமார். இவரது மனைவி சுகன்யா விஜயகுமார். இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர்கள் தற்பொழுது நல்லாம்பட்டி பகுதியில் வசித்து வருகின்றனர். இதனிடையே விஜயகுமார் - சுகன்யா தம்பதிகளுக்கு ஏற்கெனவே மூன்று வயதில் மகன் உள்ளார்.
இந்நிலையில் விஜயகுமார் - சுகன்யாவிற்கு கடந்த 45 நாட்களுக்கு முன்பு இரண்டாவதாக குரு பிரசாத் என்ற ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை குரு பிரசாத்துக்கு நேற்று பிறந்து 45ஆவது நாள்கள் ஆன நிலையில் தடுப்பூசி போடப்பட்டது. ஊசி போட்டதன் காரணமாக குழந்தைக்கு காய்ச்சல் உண்டாகியுள்ளது.
இந்நிலையில் இன்று 22.12.22 காலை குழந்தை குரு பிரசாத் தாய்ப்பால் குடித்த சிறிது நேரத்தில் குழந்தையின் வாய் மற்றும் மூக்கில் ரத்தம் வழிந்தது. உடனடியாக, குழந்தையை தூக்கிக்கொண்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு வந்தனர். ஆனால், குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து தற்பொழுது குழந்தை இறந்ததற்கான காரணம் தெரியாமல், குழந்தையின் பிரேதத்தை வாங்க மாட்டோம் என பெற்றோர் கூறியதால் பெரும் பரபரப்பு நிலவியது.
இதுதொடர்பாக மருத்துவத் துறையினரிடம் விசாரிக்கையில், 'குழந்தையின் இறப்பிற்குக் காரணம், குறை இருமல் தான். இதுவரை 25 குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அந்த குழந்தைகளுக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை. குழந்தையின் உயிரிழப்பிற்கும் தடுப்பூசிக்கும் சம்மந்தம் இல்லை’ எனத்தெரிவித்தனர்.
இதையும் படிங்க:நீ வேணா சண்டைக்கு வா...! மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட குடிமகன்