திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் முக்கிய சுற்றுலாத் தலமாக இருந்து வருகிறது. கரோனா ஊரடங்கால் கொடைக்கானல் களையிழந்து காணப்பட்டது.
பின்னர் கரோனா ஊரடங்கில் பல தளர்வுகளை அரசு அறிவித்தது. இதனால் சுற்றுலாப் பயணிகள் சிலர் கொடைக்கானலுக்கு வரத் தொடங்கினர்.
![கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-dgl-01-kodaikanal-tourist-crowd-vs-spt-tn10030_16112020135926_1611f_01078_966.png)
தொடர்ந்து தீபாவளி பண்டிகை வந்ததால், கொடைக்கானலில் கூட்டம் குறைந்தது. தற்போது தீபாவளி பண்டிகை முடிந்ததையடுத்து மீண்டும் கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகமானோர் வந்தனர்.
சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பால் வெள்ளி நீர்வீழ்ச்சி, அப்பர் லேக், பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, கோக்கர்ஸ் வாக், ஏரிச்சாலை உள்ளிட்ட இடங்கள் திறக்கப்பட்டுள்ளன. அங்கு சுற்றுலாப் பயணிகள் தங்களது கைப்பேசியில் படம் பிடித்து மகிழ்ந்தனர்.
இதையும் படிங்க: கொடைக்கானலுக்கு படையெடுக்கும் மரங்கொத்தி பறவைகள்!