தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆங்காங்கே அரசியல் கட்சியினர் பணப்பட்டுவாடா செய்வதில் மும்முரமாக உள்ளனர். இதைத் தடுப்பதற்கு பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து, கொடைக்கானல் அருகே மச்சூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர், உணவு பாதுகாப்பு அலுவலர் கண்ணன் தலைமையில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது மதுரையிலிருந்து பாஸ்கரன் என்பவர் ரூ.59 ஆயிரத்தை உரிய ஆவணங்களின்றி கொண்டுவந்துள்ளார்.
இதைப் பறக்கும் படையினர் கைப்பற்றி கொடைக்கானல் வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர். பின்னர் இந்தப் கைப்பற்றப்பட்ட பணம், அரசு கருவூலத்தில் செலுத்தப்பட்டது.
இதையும் படிங்க: 'பணப்பட்டுவாடாவால் சிறை சென்ற நடத்துநர்: பணியிடை நீக்கம்செய்த வேலூர் மண்டல போக்குவரத்துக் கழகம்!'