திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியைச் சேர்ந்தவர் பூண்டி சரவணன் என்ற சரவணன். பிரபல ரவுடியாக அறியப்படும் இந்த பூண்டி சரவணன் பெயரில் திருப்பூர், கோவை என பல்வேறு மாவட்டங்களில் வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் சின்னாளபட்டியில் செயல்ப்பட்டுவரும் மதுக்கடையின் முன்பு பூண்டி சரவணன் நேற்று (ஜூலை22) அடையாளம் தெரியாத நபர்களால் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து காலையில் இது குறித்து தகவலறிந்து வந்த காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூறாய்விற்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்பிரியா நேரில் ஆய்வு செய்தார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சியை கைப்பற்றிய காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க....இந்த உயிர் மயிருக்கு சமம்: முகநூல் நேரலையில் இளைஞர் தற்கொலை