ETV Bharat / state

குழந்தைகள் தினத்தில் பள்ளி மாணவர்கள் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு! - dindugal children's day celebration

திண்டுக்கல்: குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தனியார் பள்ளி ஒன்று கலை நிகழ்ச்சிக்கு மாற்றாக பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல், சாலை பாதுகாப்பு உள்ளிட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர்.

பள்ளி மாணவர்கள்
author img

By

Published : Nov 14, 2019, 11:29 PM IST

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளான நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. பொதுவாக குழந்தைகள் தினம் என்றாலே பள்ளிகளில் பேச்சுப்போட்டி, கவிதை, கட்டுரை எழுதுதல், மாறுவேடம், நடனம் போன்ற போட்டிகள் தான் நடைபெறும். ஆனால் ஒரு மாறுதலாக குழந்தைகள் தினத்தில் பொதுமக்களுக்கு உதவும் விதமான சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியைப் திண்டுக்கலில் பள்ளி குழந்தைகள் மூலமாகவே அறிவுறுத்தப்பட்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

திண்டுக்கல் நகரில் உள்ள சோபியா மெட்ரிக் பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளியின் நுழைவு வாயிலின் இருபுறமும் டெங்கு காய்ச்சல், சாலை பாதுகாப்பு, பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் மது, புகைபிடித்தல் பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து செயல்முறை விளக்கத்துடன் பொதுமக்களுக்கு பள்ளி மாணவர்கள் விளக்கினர். இதனை சாலையில் சென்ற பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டுச் சென்றனர்.

பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு நிகழ்ச்சி

இதுகுறித்து பள்ளி முதல்வர் கூறுகையில், "குழந்தைகள் தினம் என்பது குழந்தைகளுக்கு மட்டுமின்றி அவர்கள் வாழும் சமூகத்தின் மேம்பாட்டையும், பாதுகாப்பையும் உறுதிசெய்வதாக இருக்க வேண்டும். அதற்காக தான் குழந்தைகளின் வாயிலாகவே இதை எடுத்துரைக்கிறோம். இதனைக் காணும் பெற்றோர் கண்டிப்பாக கடைபிடிப்பர். அதேபோல் மக்களின் மனதிலும் ஆழமாக பதிந்திடும்" என்றார்.

மேலும் படிக்க: ரோஜாவின் ராஜா நேருவின் பிறந்தநாள்: தலைவர்கள் மரியாதை

Intro:திண்டுக்கல் 14.11.19

கலை நிகழ்ச்சிகளுக்கு மாற்றாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை முன்னெடுத்த குழந்தைகள்.

Body:இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளான நவம்பர் 14 குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. பொதுவாக குழந்தைகள் தினம் என்றாலே பள்ளிகளில் பேச்சுப்போட்டி, கவிதை, கட்டுரை எழுதுதல், மாறுவேடம், நடனம் போன்ற போட்டிகள் தான் நடைபெறும். ஆனால் ஒரு மாறுதலாக குழந்தைகள் தினத்தில் பொதுமக்களுக்கு பயனாளிக்கும் சமூக விழிப்புணர்வு பிரச்சாரத்தை குழந்தைகள் மூலமாகவே அறிவுறுத்தப்பட்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

திண்டுக்கல் நகரில் உள்ள சோபியா மெட்ரிக் பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளியின் நுழைவு வாயிலின் இருபுறமும் டெங்கு காய்ச்சல், சாலை பாதுகாப்பு, பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் மது, புகைபிடித்தல் பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து செயல்முறை விளக்கத்துடன் பொதுமக்களுக்கு பள்ளி மாணவர்கள் விளக்கினார். இதனை சாலையில் சென்ற பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு சென்றனர்.

இது குறித்து பள்ளி முதல்வர் கூறுகையில், குழந்தைகள் தினம் என்பது குழந்தைகளுக்கு மட்டுமின்றி அவர்கள் வாழும் சமூகத்தின் மேம்பாட்டையும், பாதுகாப்பையும் உறுதிசெய்வதாக இருக்க வேண்டும். அதற்காக தான் குழந்தைகளின் வாயிலாகவே இதை எடுத்துரைக்கிறோம். இதனை காணும் பெற்றோர் கண்டிப்பாக கடைப்பிடிப்பர். அதேபோல மக்களின் மனதிலும் ஆழமாக பதிந்திடும் என்றார்.

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.