ETV Bharat / state

மனைவியின் படுக்கையறை வீடியோவை நண்பர்களுக்கு பகிர்ந்த கொடூர கணவன் கைது!

திண்டுக்கல் மாவட்டத்தில் இளம்பெண்ணை மத்திய அரசு ஊழியர் என்று ஏமாற்றி திருமணம் செய்ததோடு, மனைவியுடன் இருந்த படுக்கையறை காட்சிகளை நண்பர்களுக்கு பகிர்ந்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மனைவியின் படுக்கையறை வீடியோவை நண்பர்களுக்கு பகிர்ந்த கணவர் கைது!

author img

By

Published : Feb 14, 2023, 1:20 PM IST

திண்டுக்கல்: பழனியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணுக்கும், கோபிசெட்டிபாளையம் தாலுகாவைச் சேர்ந்த ஒருவருக்கும் 2020ஆம் ஆண்டில் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர் மத்திய உணவு பாதுகாப்பு அலுவலராக பணிபுரிந்து வந்ததாக கூறியுள்ளார். இந்த திருமணத்தின்போது, ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் உள்பட 20 சவரன் நகையும், மாப்பிள்ளைக்கு தனியாக 3 சவரன் நகையும் வரதட்சணையாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிரசவத்திற்காக இளம்பெண் தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து மீண்டும் அப்பெண் கணவர் வீட்டுக்குத் திரும்பி உள்ளார். அங்கு அவரது கணவர், மாமனார் மற்றும் மாமியார் ஆகியோர் மீண்டும் வரதட்சணை கேட்டு துன்புறுத்தி உள்ளனர்.

எனவே அப்பெண் மீண்டும் குழந்தையுடன் பெற்றோர் வீட்டிற்குச் சென்றுள்ளார். இந்த நிலையில், இளம்பெண்ணை தொடர்பு கொண்ட தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், உனது கணவர் மத்திய அரசு பணியில் இல்லை என்றும், பலருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பல லட்சம் ரூபாயை பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாகவும் கூறி உள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண், இதுகுறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து இது குறித்து இளம்பெண்ணின் உறவினர்கள் அவரது கணவரிடம் கேட்டுள்ளனர். அப்போது அவர், ‘எனது மனைவி உடன் படுக்கையறையில் இருந்தபோது நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் வீடியோ கால் செய்து, மனைவியுடன் படுக்கையறை காட்சிகளை பகிர்ந்தேன்.

அதை பதிவும் செய்து வைத்துள்ளேன். எனவே நான் மத்திய அரசு ஊழியர் இல்லை என்பதை வெளியில் கூறினாலோ, அல்லது புகார் அளித்தாலோ அந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து விடுவேன்’ என மிரட்டியுள்ளார். பின்னர் இளம்பெண், இதுகுறித்து அவர் அருகிலுள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் அனைத்து மகளிர் காவல் நிலைய துணை காவல் ஆய்வாளர், இளம்பெண்ணின் கணவர் மீது இந்திய தண்டனை சட்டம் 120 (பி) (கூட்டு சதி), 170, 171 (மத்திய அரசு ஊழியராக நடித்து, அரசு ஊழியர் போன்று போலி ஆவணம் தயாரித்தல்), 417 (ஏமாற்றி திருமணம் செய்தல்), 294 (பி) (தகாத வார்த்தையால் பேசுதல்), 498 (ஏ) (வரதட்சணை கொடுமை), 468 (போலி ஆவணம் தயாரித்தல்), 471(போலி ஆவணம் பயன்படுத்துல்), 506 (2) ( கொலை மிரட்டல் விடுத்தல்) ஆகிய 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தார். தொடர்ந்து அவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

இதையும் படிங்க: பள்ளிக்கு தெரியாமல் சுற்றுலா.. லேபில் வைத்து பாலியல் தொல்லை.. அரசு பள்ளி ஆசிரியரின் கொடூரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.