திண்டுக்கல்: திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள ஸ்பென்ஸர் காம்பவுண்ட் பகுதியைச் சேர்ந்தவர் மருத்துவர் கணேசன். இவரது மனைவி பவானி மகப்பேறு மருத்துவர். கணவன் மனைவி இருவரும் திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே பவானி கணேசன் என்ற பெயரில் கிளினிக் ஒன்றினை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மகப்பேறு மருத்துவரான பவானி இறந்துவிட்டார். இந்த நிலையில் கோவையைச் சேர்ந்த சித்ரா பிரியதர்ஷினி என்பவர் இறந்து போன மருத்துவர் பவானி பெயரை தனது பெயராக மாற்றிக்கொண்டு தற்போது இந்த மருத்துவமனையை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
மேலும், சித்ரா பிரியதர்ஷினி இதே மருத்துவமனையின் உன்மையான உரிமையாளரான மகப்பேறு மருத்துவர் பவானியிடம் பல ஆண்டுகளுக்கு முன்பு வேலை பார்த்ததாகவும் மகப்பேறு மருத்துவர் பவானி இறந்தபிறகு அவரது பெயரை தன் பெயராக மாற்றிய சித்ரா பிரியதர்ஷினி, தவறான முறையில் கர்ப்பமாகும் பெண்கள் கருவை கலைப்பதாகவும் தமிழக சுகாதாரத் துறைக்கு சட்டத்திற்கு புறம்பாக பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து திண்டுக்கல் மருத்துவ ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் மருத்துவர் பூமிநாதன், நகர் நல அலுவலர் முத்துக்குமார், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் இணைந்து அதிரடியாக சம்மந்தப்பட அந்த கிளினிக்கினை ஆய்வு செய்தனர்.
இதனை அடுத்து அங்கு இருந்த சித்ரா பிரியதர்ஷினியிரிடம் மருத்துவத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், தான் பவானி சங்கர் என்றும் கோவையில் மருத்துவ படிப்பு படித்ததாகவும் கூறியதாகவும், அதற்க்கான மருத்துவ சான்றிதழ்களை தரக்கோரி அதிகாரிகள் கேட்டதற்கு அவர் தனது சான்றிதழ்களை விசாரணை அதிகாரிகளிடம் காண்பிக்க மறுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சம்மந்தப்பட்ட மருத்துவமனை செயல்படுவதற்கான உரிமம் இல்லாமல் செயல்பட்டதும் முறையான பயிற்சி இன்றி அலோபதி மற்றும் சித்தா தொடர்பாக சிகிச்சை அளித்ததும் காலாவதி மாத்திரைகள் இருந்ததையும் சோதனைக்கு வந்த மருத்துவக் குழுவினர் கண்டறிந்தனர்.
இதனைத் தொடர்ந்து சோதனையில் கண்டறியப்பட்ட ஆவனங்கள் அனைத்தையும் பறிமுதல் செய்த அதிகாரிகள் மருத்துவமனைக்கு சீல் வைத்தனர். மேலும் இது தொடர்பாக சித்ரா பிரியதர்ஷினியிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: "ஐஏஎஸ் படிக்கிறீங்களா.. நான் படிக்க வைக்கிறேன்" மறைந்த விவசாயியின் மகளுக்கு உறுதியளித்த விஷால்!