திண்டுக்கல்: அருகே ஒட்டன்சத்திரம் தாலுகா பகுதிக்குட்பட்ட மேட்டுபட்டி பகுதியில் இன்று காலை இரு சக்கர வாகனங்கள் இரண்டு ஸ்பெலண்டர் பைக்குகளும் ,ஒரு ஸ்கூட்டி வாகனமும் மூன்று பைக்குகளும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பூசாரி கவுண்டன் வலசை சேர்ந்த பிரவின் 20 வயது ,இவருடைய சித்தி குமராத்தாள் 55 வயது இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இருவரது உடலை மீட்ட போலிசார் பழனி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் மேலும் படுகாயமடைந்த வேலம்பட்டியை சேர்ந்த ஜெகன், சரவணம்பட்டியை சேர்ந்த செந்தில் இருவருும் பழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டனர். இதுகுறித்து கள்ளிமந்தயம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மூன்று பைக்குகள் நேருக்கு நேர் மோதி கொண்ட சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சையை ,பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:தாம்பரத்தில் 7 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் கைது - ரூ. 2 கோடியே 75 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மீட்பு!