ETV Bharat / state

பழனி முருகன் கோயில் சேவல்களை ஏலம் விடுவதில் தகராறு; உதவி ஆணையர் ஒருமையில் பேசியதால் பரபரப்பு! - பழனி முருகன் கோயில் சேவல்கள் ஏலம்

பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் காணிக்கைகளாக செலுத்தும் சேவல்களை ஏலம் விடுவதில் இன்றும் பிரச்சனை ஏற்பட்டதால் பரபரப்பு உதவி ஆணையர் லட்சுமி ஒருவரை ஒருமையில் பேசியதால் இந்து அமைப்பினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பழனி முருகன் கோயில் சேவல்களை ஏலம் விடுவதில் தகராறு

author img

By

Published : Jul 28, 2023, 11:52 AM IST

திண்டுக்கல்: அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பக்தர்கள் பல்வேறு விதமான நேர்த்திக்கடனில் ஒன்றாக சேவல்களை காணிக்கையாக செலுத்துவது வழக்கமாக இருந்து வருகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு மொத்தமாக குத்தகைக்கு விடப்பட்டு வந்த நிலையில் சில மாதங்களாக கோயில் நிர்வாகமே தினந்தோறும் சேவல்களை மலைக்கோயிலில் வைத்தே ஏலம் விட்டு வந்தது.

இந்த நிலையில் பொதுமக்கள் சேவல்களை மலை கோவிலுக்கு ஏலம் எடுக்க ஆர்வம் காட்டாததால் நேற்று முதல், கோயில் நிர்வாகம் திடீரென சேவல்களை மலை அடிவாரத்தில் உள்ள மின் இழுவை ரயில் நிலையம் முன்பு வைத்து ஏலம் விட்டனர். பக்தர்கள் செலுத்திய சேவல்கள் ஏலம் விடப்பட்ட போது நேற்று விலை அதிகமாக வைத்து விற்பதாக பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவத்தை அடுத்து இன்று கோயில் நிர்வாகம், ஏலம் விடுவதில் பிரச்சனை இருப்பதாக காவல் நிலையத்தில் பாதுகாப்பு வேண்டுமென மனு அளித்திருந்தது.

இதனை அடுத்து இன்றைய ஏலம் விடுவதற்கு காவல்துறையினர் வந்திருந்தனர். அப்போது ஹிந்து முன்னணி நிர்வாகிகள் அங்கு வந்திருந்தனர் அப்போது உதவி ஆணையர் லட்சுமி ஏலம் விடுவதற்கு பார்வையிட வருகை தந்திருந்தார். அப்போது இந்து முன்னணியினர். பாரம்பரியமாக மலைக்கோயிலில் நடைபெற்று வரும் சேவல் ஏலத்தை ஏன் முன்னறிவிப்பு இன்றி கீழே இடத்தை மாற்றியுள்ளீர்கள் எனவும் கேள்வி எழுப்பினர்.

அதற்கு உதவி ஆணையர் லட்சுமி நாங்கள் எங்கு வேண்டுமானாலும் வைத்து ஏலம் விடுவோம் அதை நீங்கள் கேட்கக் கூடாது என்று கூறவே இது வழிபாட்டு முறை. இதை அப்படி செய்யக்கூடாது பாரம்பரியமாக என்ன நடந்ததோ அதைத்தான் செய்ய வேண்டும் என இந்து முன்னணியினர் கூறினர். அப்போது லட்சுமி, “லூசு மாதிரி பேசாதீங்க” என்று கூறியதால் ஹிந்து முன்னணியினருக்கும் உதவி ஆணையர் லட்சுமிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் காவல் துறையினர் சமாதானம் செய்து வைத்து பின் ஏலம் நடக்க ஆரம்பித்தது. கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட சேவல்களை ஏலம் விட்ட போது ஒருவர் கூட ஏலம் கேட்காமல் வேடிக்கை மட்டுமே பார்த்தனர். இதனால் மீண்டும் ஏலம் நாளை நடக்கும் என்று கூறி சேவல் கோழிகளை ஊழியர்கள் எடுத்துச் சென்றனர். அங்கிருந்து புறப்படுவதற்காக சென்ற உதவியாளர்கள் லட்சுமியை இந்து அமைப்பினர் ஒன்று கூடி முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு அவரை வெளியேற விடாமல் தடுத்தனர்.

அப்போது எங்களை லூசு என்று ஒருமையில் பேசிய உதவி ஆணையர் லட்சுமி மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் “அப்படியெல்லாம் கேட்க முடியாது போயா” எனவும் பேசியதால் மீண்டும் ஆத்திரம் அடைந்த இந்து அமைப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை வெளியே செல்ல விடாமல் தடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது “உங்களை போடி என்று சொன்னால் ஒத்துக்கொள்வீர்களா?” என்று இந்து அமைப்பினர் வாக்குவாதம் செய்து போது ஒரு கட்டத்தில் போடி, வாடி என்று பேசினர்.

இதனை அடுத்து காவல்துறையினர் உதவி ஆணையர் லட்சுமியை மீட்டு அனுப்பி வைத்தனர். நாங்கள் வெளியே விடமாட்டோம் என்று இந்து அமைப்பினர் உதவி ஆணையர் லட்சுமியின் காரை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஆட்டோவை சாலையில் நிறுத்தியும் பிரச்சினையில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக மின் இழுவை ரயில் பகுதி கலவர இடம் போல் காட்சி அளித்தது.

மேலும் சில மாதங்களுக்கு முன் உதவி ஆணையர் லட்சுமி ஏற்கனவே அடிவாரத்தில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வந்த போது ஒரு பெண்ணின் சங்கிலியை பிடித்து இழுத்தார். இதனால் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அவரை காவல்துறையினர் மீட்டுச் சென்றனர். மீண்டும் உதவி ஆணையர் லட்சுமி பொதுமக்களை ஒருமையில் பேசியதால் கலவர இடம் போல் இருந்தது. இதுகுறித்து இருதரப்பும் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: பழனி கோயிலில் சேவல், கோழிகளை குறைந்த விலைக்கு ஏலம் விட பொதுமக்கள் கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.