ETV Bharat / state

'தேர்வு என்று வந்தால் 2 பெண்கள் தற்கொலைசெய்வது வழக்கம்தான்!' - சொன்னவர் அர்ஜுன் சம்பத் - இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி

ஐந்து, எட்டு ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை அரசு கொண்டுவந்துள்ளது வரவேற்கத்தக்கது என்று கூறியுள்ள இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், தேர்வு என்று வந்தால் இரண்டு பெண்கள் தற்கொலைசெய்து கொள்வது வழக்கம் என்று சர்ச்சை கருத்தைப் பதிவுசெய்துள்ளார்.

hindu makkal party leader arjun sampath, arjun sampath addressing press in dindugul, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி, அர்ஜுன் சம்பத் சர்ச்சை
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி
author img

By

Published : Jan 29, 2020, 7:49 PM IST

திண்டுக்கல்: தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ள ஐந்து, எட்டு ஆகிய வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை இந்து மக்கள் கட்சி வரவேற்றுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்ற மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு செய்தியாளர்களைச் சந்தித்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் பேசியபோது, "மாநில அரசு கொண்டுவந்த 5ஆம் வகுப்பு, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வை வரவேற்கிறோம்.

பொதுத்தேர்வு என்றால் மாணவர்கள் தற்கொலைசெய்வது இயல்பு; அதற்காகத் தேர்வை நிறுத்த முடியாது. தடுப்பதற்கான வழிகளைத்தான் பார்க்க வேண்டும். கல்வி உரிமைகள் குறித்து பேசுபவர்கள் கல்விக் களத்தை போர்க்களமாக மாற்றிவருகின்றனர்.

அதே சமயத்தில் அரசு பல சலுகைகள் மாணவர்களுக்கு செய்துகொடுத்தும் மாணவர்கள் படிப்பதில்லை. 5, 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளை கம்யூனிஸ்ட்டுகள், திமுகவினர் தமிழ்நாட்டு மாணவர்கள் படித்துவிடக் கூடாது என்று எதிர்க்கின்றனர்.

இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி

பெரியார் கூறினார், 'எனக்குப் படித்தவர்கள் தேவையில்லை, முட்டாள்கள்தான் தேவை' என்று. அதேபோன்றுதான் திமுகவினர் மாணவர்கள் படிக்கக் கூடாது உதயநிதிக்கு கொடி பிடிக்க வேண்டும், சுவரொட்டி ஒட்ட வேண்டும் என நினைக்கின்றனர்.

படித்தவர்கள் யாரும் திமுகவிற்கு வாக்களிக்க மாட்டார்கள். விவசாயியான எடப்பாடி பழனிசாமி தனது உழைப்பால் முதலமைச்சரானதால் ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், தேர்வு என்று வந்தால் இரண்டு பெண்கள் தற்கொலை-செய்துகொள்வது வழக்கம் என்று சர்ச்சைக்குரிய கருத்தைப் பதிவுசெய்துள்ளார்.

Intro:தமிழக அரசு கொண்டுவந்த 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை இந்து மக்கள் கட்சி வரவேற்கிறது. கம்யூனிஸ்ட்களும், திமுகவினரும் குழந்தைகள் படித்து விட கூடாது என்பதால் எதிர்க்கிறார்கள் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் ஒட்டன்சத்திரத்தில் பேட்டி.

Body:திண்டுக்கல் 29.01.2020
எம்.பூபதி செய்தியாளர்

தமிழக அரசு கொண்டுவந்த 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை இந்து மக்கள் கட்சி வரவேற்கிறது. கம்யூனிஸ்ட்களும், திமுகவினரும் குழந்தைகள் படித்து விட கூடாது என்பதால் எதிர்க்கிறார்கள் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் ஒட்டன்சத்திரத்தில் பேட்டி.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்ற மாவட்ட செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு செய்தியாளர்களை சந்தித்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் " தமிழக அரசு கொண்டுவந்த 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு பொதுத் தேர்வை வரவேற்கிறோம். பொதுத் தேர்வு என்றால் மாணவர்கள் தற்கொலை செய்வது இயல்பு அதற்காக தேர்வை நிறுத்த முடியாது. தடுப்பதற்கான வழிகளைத்தான் பர்க்க வேண்டும். கல்வி உரிமைகள் பற்றி பேசுபவர்கள் கல்வி களத்தை போர்க்களமாக மாற்றி வருகின்றனர். அதே சமயத்தில் அரசு பல சலுகைகள் மாணவர்களுக்கு செய்து கொடுத்தும் மாணவர்கள் படிப்பதில்லை. 5, 8-ம் வகுப்புகளுக்கான பொது தேர்வுகளை கம்யூனிஸ்ட்டுகள், திமுகவினர் தமிழக மாணவர்கள் படித்துவிடக் கூடாது என்று எதிர்கின்றனர். பெரியார் கூறினார் எனக்கு படித்தவர்கள் தேவையில்லை முட்டாள்கள்தான் தேவை என்றார். அதே போன்று தான் திமுகவினர் மாணவர்கள் படிக்க கூடாது உதயநிதிக்கு கொடி பிடிக்க வேண்டும், போஸ்டர் ஒட்டவேண்டும் என நினைக்கிறார். படித்தவர்கள் யாரும் திமுக விற்கு ஓட்டுபோட மாட்டார்கள். விவசாயியான எடப்பாடி பழனிச்சாமி தனது உழைப்பால் முதல்வரானதால் ஸ்டாலினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மதுபான ஆலையினால் வந்த பணத்தில் தேர்தலில் இடது மற்றும் வலது கம்யூனிஸ்ட்களுக்கு 25 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. ரஜினி BJP-யின் கை கூலி என்று கூறினால் 5 ஆண்டு காலம் வாஜ்பாயுடன் திமுக கூட்டணியில் இருந்ததை எப்படி சொல்வது. திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் வேலுச்சாமி இவர் திமுக வின் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது. இவரை திமுக முன்னால் அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் திமுக கொரடா சக்கரபாணி சேர்ந்து ஸ்டாலினுக்கு 10 கோடி ரூபாய் கொடுத்து சீட் விலைக்கு வாங்கியுள்ளார். திமுக வினர் எழுதிக்கொடுப்பதை ஒழுங்கா படிக்கக்கூடத் தெரியாதவர் ஸ்டாலின். ரஜினியை பார்த்து ஸ்டாலின் பயப்படுகிறார். இனி ரஜினிகாந்திற்கும் ஸ்டாலினிக்கும் தான் போட்டி. விரைவில் ஸ்டாலின் காணாமல் போய்விடுவார் என செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.Conclusion:திண்டுக்கல் 29.01.2020

தமிழக அரசு கொண்டுவந்த 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை இந்து மக்கள் கட்சி வரவேற்கிறது. கம்யூனிஸ்ட்களும், திமுகவினரும் குழந்தைகள் படித்து விட கூடாது என்பதால் எதிர்க்கிறார்கள் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் ஒட்டன்சத்திரத்தில் பேட்டி.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.