திண்டுக்கல் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்குவது கொடைக்கானல் . இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்க பல்வேறு சுற்றுலா இடங்கள் அமைந்துள்ளது. சுற்றுலா பயணிகள் பொதுவாக தங்களின் சொந்த வாகனங்கள் மூலமும் தனியார் வாடகை கார்கள் மூலம் வருகை தந்து கொடைக்கானலில் ரசித்து செல்வர். ஆனால் தமிழ்நாட்டில் முதல்முறையாக கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வானில் பறந்து கண்டு ரசிக்க தனியார் நிறுவனத்தின் மூலம் ஹெலிகாப்டர் சேவை இன்று முதல் மூன்று நாட்களுக்கு தொடங்கப்பட்டுள்ளது.
இந்த ஹெலிகாப்டரில் 6 பயணிகள் பயணிக்க கூடியதாகவும் நபர் ஒருவருக்கு 6 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய்வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அவசர கால மருத்துவ சிகிச்சைக்கு குறைந்த செலவில் பயன்படுத்தலாம் எனவும் தெரிவித்தனர்.
இதுகுறித்து தனியார் நிறுவனமான பிளனட்எக்ஸ் துணை தலைவர் ஹரிஹரன் கூறுகையில், “இந்த நிறுவனம் பணி ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களால் ஆரம்பிக்கப்பட்டது. அனைவரும் பயன்பெறும் வகையில் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சேவை தற்போது தற்காலிகமாக நவம்பர் 1 முதல் 3ஆம் தேதி வரை அரசின் விதிமுறைகளை பின்பற்றி செயல்படுத்தப்பட உள்ளோம். அதுபோல வெளிநாடுகளில் ஹெலிகாப்டர் போன்ற சேவை பயன்படுத்துவது போல் இந்த சேவையை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” எனவு கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: யாரோ பெற்ற பிள்ளைக்கு; நான் தான் தகப்பன் என்பது போல திமுக செயல்படுகிறது!