ETV Bharat / state

பழனியில் கரோனா பாதிப்பு: இருவேறு பகுதிகளுக்குச் சீல்வைப்பு - பழனியில் கரோனா பாதிப்பு

திண்டுக்கல்: பழனியில் கரோனா பரவல் காரணமாக இருவேறு பகுதிகளுக்குச் சீல்வைத்து சுகாதாரத் துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பழனியில் கரோனா பரவல்  பழனியில் இருவேறு பகுதிகளுக்கு சீல்வைப்பு  சுகாதாரத்துறை அலுவலர்கள்  Corona Spread in Palani  Health Officers Sealing to two different areas in Palani  Sealing to two different areas in Palani  பழனியில் கரோனா பாதிப்பு  Corona damage in Palani
Health Officers Sealing to two different areas in Palani
author img

By

Published : Apr 12, 2021, 1:52 PM IST

நாடு முழுவதும் கரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவிவருகிறது‌. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கடந்த சில நாள்களாகக் கரோனா பரவல் அதிகரித்துவருகிறது. இதன் காரணமாக பழனி அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்காக 60 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு செயல்படத் தொடங்கியுள்ளது.

இதேபோல், பழனியாண்டவர் ஆண்கள் கலைக்கல்லூரியில் 100 படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையமும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பழனி ஜீவானந்தம் தெரு, பெரியப்பா நகர் பகுதிகளில் ஆறுக்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, இரு பகுதிகளுக்கு சுகாதாரத் துறை அலுவலர்கள் சீல்வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: காதலிக்கு கட்டாய திருமணம்: கரம்பிடித்த மலேசியக் காதலன்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.