திண்டுக்கல் மாவட்டம் அருகேயுள்ள நாகல் நகர் பகுதியில் வசித்துவருபவர் இளங்கோவன். இவரது மனைவி வனஜா. மகள் சுகுணா மனநலம் பாதிக்கப்பட்டவர்.
இளங்கோவன் தனது மனைவியுடன் நெசவுத் தொழில் செய்து வாழ்ந்துவந்த நிலையில், கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் போக்குவரத்து சேவைகள் முற்றிலும் முடக்கப்பட்டதன் காரணமாக தங்களது தொழிலிற்கு தேவையான பொருள்களை பெறுவதில் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
இதன்காரணமாக ஒரு மாதத்திற்கும் மேலாக தொழில் செய்யமுடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். மனநிலை பாதிக்கப்பட்ட மகளுக்கு கிடைக்கவேண்டிய நிவாரணத் தொகையும் கிடைக்கவில்லை என்றும், போக்குவரத்து முடங்கியதால் தங்களது வாழ்க்கையும் முடங்கியுள்ளதாக வருத்தம் தெரிவிக்கின்றனர்.
கையில் போதிய வருமானமின்றி ஒருவேளை உணவிற்கும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகிவருவதாகவும், அரசு தங்களுக்கு உதவினால் மட்டுமே உயிர் பிழைக்க முடியும் எனவும் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: காட்டுப்பூவை சாப்பிடும் கூலித்தொழிலாளர் குடும்பம் - ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த அவலம்!