ETV Bharat / state

அமெரிக்காவில் இருந்து பழனி வந்த பெண்ணுக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறி! - திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அமெரிக்கா சென்று வந்த பெண்ணுக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், பன்றிக் காய்ச்சல் அறிகுறி தென்பட்டுள்ளதால் அவர் பழனியில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

H1N1 flu Symptoms
H1N1 flu Symptoms
author img

By

Published : Aug 1, 2022, 6:11 PM IST

திண்டுக்கல்: பழனியைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கடந்த மாதம் அமெரிக்காவிற்குச்சென்றுள்ளார். அமெரிக்காவில் பணிபுரியும் தனது கணவருடன் சில காலம் இருந்துவிட்டு கடந்த வாரம் இந்தியா வந்துள்ளார். பழனிக்கு வந்த அந்தப் பெண் தஞ்சாவூரில் நடைபெற்ற தனது உறவினர் இல்ல விழாவிற்குச்சென்று வந்த நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மருத்துவமனையில் நான்கு நாள்கள் சிகிச்சையில் இருந்தார். அதைத்தொடர்ந்து அவரை பழனியில் உள்ள அவரது வீட்டிற்கு உறவினர்கள் அழைத்து வந்தனர். இந்நிலையில், மருத்துவப்பரிசோதனையில் அந்தப் பெண்ணிற்கு கரோனா மற்றும் பன்றிக்காய்ச்சல் அறிகுறிகள் உள்ளது தெரியவந்துள்ளது.

இதன்காரணமாக பழனியில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ள அந்தப்பெண்ணை பழனி சுகாதாரத்துறை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து, சிகிச்சையளித்து வருகின்றனர். அமெரிக்கா சென்று வந்த பெண்ணிற்கு பன்றிக்காய்ச்சல் மற்றும் கரோனா தொற்று அறிகுறி உள்ளது பழனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கேரளாவில் உயிரிழந்த இளைஞருக்கு குரங்கம்மை உறுதி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.