திண்டுக்கல்: பழனியிலிருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில் உள்ள புளியமரத்துசெட் பகுதியைச் சேர்ந்தவர் மரியபாக்கியம் (60). இவர் நேற்று (செப். 30) அதிகாலை கோடைகால நீர்த்தேக்கத்தை ஒட்டியுள்ள பகுதியில் விறகு சேகரிக்கச் சென்றிருக்கிறார்.
அப்போது நீண்ட நேரமாகியும் மரியபாக்கியம் வீடு திரும்பாததால் அச்சமடைந்த உறவினர்கள், அவரைத் தேடியுள்ளனர். இந்நிலையில் இன்று (அக். 1) காலை மரியபாக்கியம், காட்டு யானைத் தாக்கி வனப்பகுதிக்குள் உடல் சிதறி உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல், வனத் துறையினர் மூதாட்டியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பிவைத்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதி மக்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: இடம் ஆக்கிரமிப்பு: பழங்குடியினர் வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்