திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள மக்களுக்கு விவசாயமே பிரதான தொழிலாக இருந்துவருகிறது. கீழ்மலை கிராமங்களான பெருமாள்மலை, மச்சூர், பண்ணைகாடு, தாண்டிகுடி, மங்களம்கொம்பு, கோம்பை, பாச்சலூர் உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதிகளில் விவசாயமாக காப்பி பயிரிடப்பட்டுவருகிறது.
கடந்த சில வருடம் பெய்ய வேண்டிய மழை பொய்த்துப்போனதால் காப்பி விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தொடர்ந்து கொடைக்கானல், சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் தற்போது நல்ல மழை பெய்துவருவதால் காப்பி விவசாயமானது நல்ல விளைச்சலைக் கண்டுள்ளது.
தற்போது அறுவடை செய்யப்பட்டுவரும் ஒரு கிலோ காப்பி ரூ.150 முதல் வியாபாரிகள் வாங்கிச் செல்வதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
நல்ல விளைச்சல் இருந்தும் விலை குறைந்துவருவதால் நஷ்டம் அடைந்துவருகிறது. மேலும் பராமரிப்பு மற்றும் பணியாளர்களின் சம்பளம் ஆகியவை போதிய அளவில் இல்லை என விவசாயிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
எனவே தமிழ்நாடு அரசானது காப்பி விவசாயத்திற்கு நல்ல விலை நிர்ணய செய்து கொள்முதல் செய்ய வேண்டும். அப்போதுதான் காப்பி விவசாயத்தை காப்பாற்ற முடியும் என விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ’சாரல் மழை... வௌவால் தொல்லை’: கொத்துக் கொத்தாகப் பாழாகும் திராட்சைப்பழங்கள்