கரூர்- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் விட்டல் நாயக்கன்பட்டி என்ற இடத்தில் திண்டுக்கல்லிலிருந்து வேடசந்தூர் நோக்கி சென்ற அரசுப் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
அரசுப் பேருந்து ஓட்டுநர் சுப்புராஜ் பேருந்தை இயக்கி வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து நடந்துள்ளது. ஓட்டுநர், நடத்துநர் கிருஷ்ணராஜ், பயணிகள் உள்பட ஆண், பெண் என 15-க்கும் மேற்பட்டோருக்கு படுகாயம் ஏற்பட்டது.
காயமடைந்தவர்களுக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது. படுகாயம் அடைந்தவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த விபத்து குறித்து வேடசந்தூர் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: கல்லூரி பேருந்துடன் அரசுப் பேருந்து மோதி விபத்து - அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சி!