திண்டுக்கல்: பழனி அருகே கலிக்கநாயக்கன் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன். இவர் கீரனூர் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சந்திரா மணி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.
இவரது மூத்த மகள் திவ்யா என்பவர் இந்திய வனப் பணி தேர்வில் தமிழ்நாட்டில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இந்திய அளவில் பத்தாம் இடம் பிடித்துள்ளார். இவர்களது பெற்றோர் இந்திய வனப் பணி தேர்வில் வெற்றி பெற்ற தங்களது மகளுக்கு இனிப்பு ஊட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
![Forest Service examination indian Forest Service examination top rank in indian Forest Service examination இந்திய வனப்பணி தேர்வு வனப்பணி தேர்வு இந்திய வனப்பணி தேர்வில் முதலிடம் பிடித்த பெண்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-dgl-01-palani-ifsselect-student-visual-img-scr-tn10053_30102021091404_3010f_1635565444_441.jpg)
முதல் படியிலே வெற்றி
மேலும் தேர்வில் வெற்றிபெற்ற திவ்யா சென்னை அண்ணா பல்கலைக்கழகதத்தில் பிஇ எலக்ட்ரானிக்கல் எலக்ட்ரிக் இன்ஜினியர் படித்து உள்ளார். இவர் மூன்று ஆண்டுகளாக படித்து முதல் தேர்விலேயே வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து மாணவி திவ்யா, “ நான் இந்தத் தேர்வில் வெற்றி பெறுவதற்கு என்னுடைய பெற்றோரும் ஆசிரியர்களுமே காரணம். அவர்களுக்கு என் நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன். இந்தப் பணிக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் பணியாற்றுவேன்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இந்தியா 75 - 'கூலி பேகார்' முறையை ஒழித்துக்கட்டிய பத்ரி தத் பாண்டே