திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள தோப்புப்பட்டியைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவர் புதிதாக வீடு கட்டியுள்ளார். அடுத்த வாரம் கிரகபிரவேசம் நடத்த இருந்த நிலையில், வீட்டின் முன் கூரைக் கொட்டகை அமைக்கப்பட்டது.
இந்நிலையில், தங்கராஜின் மனைவி தனலட்சுமி வீட்டின் உள்ளே சமைத்துக் கொண்டிருந்தபோது, சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு வெடித்தது. பின்பு தீப்பிடிக்கத் தொடங்கியதும், உடனடியாக தனலட்சுமி வீட்டைவிட்டு வெளியேறினார். இதையடுத்து, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம், வீட்டின் உள்ளே இருந்த உபயோகப் பொருட்கள், செல்போன், ரூ.28000 ரொக்கம் உள்ளிட்டவை எரிந்து நாசமாயின.
இதுகுறித்து தகவலறிந்த வேடசந்தூர் தீயணைப்புத் துறையினர், சம்பவ இடம் சென்று தீயை அணைத்தனர்.