திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் திடீர் நகர் பகுதியில் மணிகண்டன் என்பவர் வீட்டில் சட்டவிரோதமாக சூதாட்டம் நடைபெற்றுவருவதாக காவலர்களுக்கு ரகசிய தகவல் அளிக்கப்பட்டது.
இந்தத் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற ஒட்டன்சத்திரம் காவலர்கள், அங்கு சூதாடிக் கொண்டிருந்த காந்திநகரைச் சேர்த்த பெரியசாமி, சாலைப்புதூரைச் சேர்ந்த செந்தில்குமார், காந்திநகரைச் சேர்ந்த செல்லப்பாண்டி, தங்கச்சியம்மாபட்டியைச் சேர்ந்த சிவமணி, காந்திநகரைச் சேர்ந்த அருண் மற்றும் வீட்டின் உரிமையாளர் மணிகண்டன் ஆகியோரை மடக்கிப்பிடித்து கைதுசெய்தனர்.
மேலும் சூதாட்டத்திற்கு பயன்பட்ட ரொக்கம் மற்றும் இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அந்த ஆறு பேரையும் கைது செய்து காவல்நிலையத்துக்கு அழைத்து வந்து அபராதம் விதித்து எச்சரித்து பிணையில் அனுப்பி வைத்தனர்.