சென்னையில் 16ஆவது மாநில குத்துச்சண்டை போட்டி இம்மாதம் 21 முதல் 24 நடைபெற்றது. தமிழ்நாடு மாநில குத்துச்சண்டை சங்கம் மாநில செயலாளர் பிரித்திவிராஜ் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மாநில அளவில் 18க்கும் மேற்பட்ட அணிகளைச் சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட நபர்கள் பங்கேற்றனர். இதில் திண்டுக்கல் ஆறுமுகம் பாக்ஸிங் வேர்ல்டு அண்ட் பிட்னஸ் சார்பில் பங்கேற்ற அஸ்வினி, சியாம் சுந்தர் தங்கத்தையும், வீரம்மல்லி, தினேஷ் ஆகியோர் வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனர்.
சென்னையிலிருந்து, திண்டுக்கல் சென்ற மாணவர்களை ஆறுமுகம் பாக்ஸிங் வேர்ல்டு உரிமையாளர் ராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இது குறித்து வெற்றி பெற்ற மாணவர்கள் கூறுகையில், "போட்டி கடுமையாக இருந்தது. ஆறுமுகம் பாக்ஸிங் வேர்ல்டு மூலம் பயிற்சியாளர் ஆறுமுகம் காசிராஜனிடம் பயிற்சி பெற்றதால் எளிதாக நாங்கள் வென்றோம்.
இதனால் நாங்கள் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெறுவோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்க உள்ளோம். எங்கள் வெற்றிக்குப் பயிற்சியாளர் முக்கிய பங்கு வகிக்கிறார்" என்றனர்.
இதையும் படிங்க: பழனி மருத்துவமனையின் சுகாதாரமற்ற நிலை குறித்து கேள்வி: செய்தியாளர் மீது தாக்க முயற்சி