ETV Bharat / state

'உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் மனம் வலிமைப்படும்' - பள்ளியில் அமைச்சர் சீனிவாசன் உரை - திண்டுக்கல்லில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி

திண்டுக்கல்: தருமத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 252 மாணவ - மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வனத்துறை அமைச்சர் வழங்கினார்.

free cycle
forest minister distributed free cycle
author img

By

Published : Feb 28, 2020, 10:41 AM IST

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தருமத்துப்பட்டியில் நேற்று தமிழ்நாடு அரசின் சார்பில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதி வண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் விஜயலெட்சுமி தலைமையில் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தருமத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, கோனூர் அரசு மேல்நிலைப்பள்ளி, ஶ்ரீராமபுரம் அரசு மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த 252 மாணவ-மாணவிகளுக்கு ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள மிதி வண்டிகளை வழங்கினார்.

மேலும் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை அமைச்சர் சீனிவாசன் மற்றும் மாவட்ட ஆட்சியர் விஜயலெட்சுமியும் நட்டு வைத்தனர். தொடர்ந்து விழாவில் பேசிய அமைச்சர் சீனிவாசன், 'படிக்கும் காலத்தில் மாணவ-மாணவிகள் அனைத்து வசதிகளையும் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கில் அம்மா அவர்களால் கொண்டு வரப்பட்ட விலையில்லா மிதிவண்டி, மடிக்கணினி திட்டங்கள் வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத ஒரு சிறப்பான திட்டம் ஆகும்.

மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டியை வழக்கிய அமைச்சர் சீனிவாசன்

படிக்கும் காலத்தில் நிறையச் சாப்பிடுங்கள். நிறைய விளையாடுங்கள். அத்தோடு படிக்கவும் செய்யுங்கள். ஏனெனில் உடல் உறுதியாக இருந்தால் தான் மனம் வலிமைபட்டு கல்வி தானாக அமையும்' என்று அறிவுரை வழங்கினார்.

இதையும் படிங்க: பலரின் ஓட்டல்களையும் பொருட்படுத்தாததால் இப்போது நான் ஒரு ஓட்டுநர் - திருநங்கை அபர்ணா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.