ETV Bharat / state

கொடைக்கானலில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம் - கொடைக்கானல் வனத்துறை

கொடைக்கானலில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணியை வனத்துறையினர் தொடங்கினர்.

வன விலங்குகள்
வன விலங்குகள்
author img

By

Published : Jul 6, 2022, 4:48 PM IST

திண்டுக்கல்: கொடைக்கானலில் உள்ள ஏழு வனச்சரகங்களிலும் வனச்சரகர் தலைமையில் வனவர்கள், வனப்பணியாளர்கள் உட்பட 100-க்கும் மேலானோர் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த வனவிலங்குகளின் கணக்கெடுப்பு பணியானது, தொடர்ந்து ஒரு வாரம் நீடிக்கும்; தேவைப்பட்டால் மேலும் சில நாள்கள் தொடரப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

இந்த வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணியில் மொத்தம் 9 குழுக்களாக ஈடுபட்டு உள்ளனர். கொடைக்கானலில் காட்டெருமைகள், மான்கள், கேளை ஆடு, சருகுமான், புலி, சிறுத்தை, குரங்குகள், செந்நாய், புலி, யானை, பன்றி உள்ளிட்ட விலங்குகள் எவ்வளவு உள்ளன என்பது பற்றி இந்த கணக்கெடுப்பு பணி நடைபெறும்.

வன விலங்கு கணக்கெடுப்பு பணியில் வனத்துறையினர்

வனவிலங்குகளை பார்த்தும், வனவிலங்குகளின் காலடி தடங்களை அளவீடு செய்தும் இந்த வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி நடைபெறும். மாவட்ட வன அலுவலர் திலீப் தலைமையில் இந்த பணிகள் கண்காணிக்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: தேயிலை தோட்டத்திற்குள் புகுந்த சிறுத்தை - தொழிலாளர்கள் அச்சம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.