திண்டுக்கல்: 'மலைகளின் இளவரசி' என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தக் கூடாது என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
தற்போது கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பிளாஸ்டிக்கின் பயன்பாடு குறைந்துகொண்டே வருகிறது. இந்நிலையில் பயன்படுத்தாத பிளாஸ்டிக் பாட்டில்களை வைத்து அதன் உட்புறம் மண்ணை நிரப்பி வனத்துறை தத்ரூப வீடு ஒன்றை அமைத்துள்ளது. வனத்துறையால் அமைக்கப்பட்ட பிளாஸ்டிக் வீடு அதிக உறுதித்தன்மையுடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் அப்பகுதிக்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் கவனத்தையும் பிளாஸ்டிக் வீடு பெரிதும் ஈர்த்துள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பிளாஸ்டிக் பாட்டில்கள் தடை செய்யப்பட்டு வரக்கூடிய நிலையில், இந்த பிளாஸ்டிக் வீடு ஒரு முன்னுதாரணமாகவும் மறுசுழற்சிக்கு வழி இல்லாத இடங்களில் இதுபோன்று செய்யலாம் எனவும் சுற்றுலாப் பயணிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: மீரா மிதுன் போல் ஒருவரை வைத்துக் கொண்டு படப்பிடிப்பை முடித்தது பெரிய விஷயம்- தயாரிப்பாளர் குற்றச்சாட்டு!