ETV Bharat / state

கலை நிகழ்வுகள் நடத்திட அனுமதிக்க வேண்டும் - நாட்டுப்புற கலைஞர்கள் மனு!

author img

By

Published : Apr 9, 2021, 3:46 PM IST

திண்டுக்கல்: கலை நிகழ்வுகள் நடத்திட அனுமதிக்க வேண்டும் எனக்கோரிதமிழ்நாடு நாடகம் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

folk
folk

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு நாடகம் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள் மாநில இணைப் பொதுச் செயலாளர் சந்தோஷ் தலைமையில் மனு அளிக்கவந்தனர்.

அந்த மனுவில், தமிழ்நாட்டில் நாளை (ஏப்.10) முதல் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன. இதனால் நாடகம் மட்டும் நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்படுகிறது. தப்பாட்டம், தெருக்கூத்து, கரகம், காவடி என நாடக கலைஞர்கள் மாவட்டத்தில் 10 ஆயிரம் பேர் உள்ளனர். ஆகவே திரையரங்குகளுக்கு 50 விழுக்காடு கட்டுப்பாடுகளுடன் இயக்க அனுமதி கொடுத்தது போல் திருவிழா, மேடை கச்சேரி இருக்கும் கட்டுப்பாடுடன் கூடிய தளர்வுகள் அறிவிக்க வேண்டும்.

நாட்டுப்புற கலைஞர்கள் மனு

அப்படி அறிவித்தால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படாது. கட்டுப்பாடுகள் தளர்வு ஏற்படுத்த இயலாத சூழல் ஏற்பட்டால் பேரிடர் நிவாரணமாக கலைஞர்கள் அனைவருக்கும் மாதம் ரூபாய் 10,000 வழங்க வேண்டும். மேலும் கடந்த ஊரடங்கு காலத்தில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் ரூபாய் 2,000 வழங்கப்பட்டது. அதுவும் பாதி பேருக்கு கிடைக்கவில்லை. இதனால் நாடகம் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள் அதிக அளவில் பாதிப்பு அடைந்தனர். இந்த முறையாவது அனைவரும் பயன்படும் வகையில் உதவித்தொகை வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.