திண்டுக்கல்: கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பும் இடமாக பிரையண்ட் பூங்கா அமைந்துள்ளது. கரோனா பெரும் தொற்றின் காரணமாக இரண்டு ஆண்டுகளாக மலர் கண்காட்சி தடைவிதிக்கப்பட்டது.
தற்போது கரோனா பரவல் குறைந்துள்ள சூழலில் கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில், மலர் கண்காட்சி நடைபெறும் எனப் பல்வேறு தரப்பினரும் எதிர்பார்த்துவருகின்றனர். இந்தச் சூழலில் பிரையண்ட் பூங்காவில் வரும் 59ஆவது மலர் கண்காட்சிக்காக மலர் நாற்றுகள் நடவுப்பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
இதில் சால்வியா, டெல்பினியம், ஆர்நத்திகளம் உள்ளிட்ட பல்வேறு மலர்ச் செடிகளை நடவுசெய்யும் பணி நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் மலர் கண்காட்சிக்குப் பல லட்சம் வரையிலான மலர்கள் பூத்துக்குலுங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது எனத் தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: குளிர்காலக் கூட்டத்தொடர்: சுமுகமாக நடத்துவது குறித்து அனைத்துக் கட்சி ஆலோசனை