திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கோபால்பட்டியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக புறநகர் துணை காவல் கண்காணிப்பாளர் வினோத்திற்கு ரகசியத் தகவல் வந்தது.
அதன்பேரில் சாணார்பட்டி காவல்துறை துணை ஆய்வாளர் வாசு, சிறப்பு துணை ஆய்வாளர் சிவக்குமார், ஏட்டு மணிகண்டன் ஆகியோர் அந்தப் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அய்யாபட்டி அய்யனார் கோயில் பின்புறம், பணம் வைத்து சூதாடிய கும்பலை மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் அய்யாபட்டியைச் சேர்ந்த கனகராஜ் (வயது 36), நத்தத்தைச் சேர்ந்த கணேசன் (50), குள்ளனம்பட்டியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட ஐந்து பேர் சூதாடியது தெரிய வந்தது.
இதையடுத்து காவல் துறையினர் அவர்கள் ஐந்து பேரையும் கைதுசெய்து, அவர்களிடமிருந்து 11 இருசக்கர வாகனங்கள், நான்கு செல்போன்கள், ரூபாய் 10,351 உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க... ரம்மியில் 10.50 லட்ச ரூபாயை கோட்டைவிட்ட மகன் - தந்தைக்கு நெஞ்சுவலி!